சித்திரை திருவிழா: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:37 am
mp-election-and-madurai-chithirai-festival

சித்தரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று  மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்தரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக  நடத்தப்படுவது வழக்கம். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும். ஆனால் இந்த முறை, வரும் ஏப்ரல் 18 -ஆம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.

அன்றைய தினத்தில், சித்திரை திருவிழாவைவும் திட்டமிட்டப்படி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே, துதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close