திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு?

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:53 am
judgement-will-be-released-soon-reg-thiruparankundram-case

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். 

இதையடுத்து, விடுபட்ட 3 தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க கோரி, மனுதாரர் சரவணன் சார்பில் வழக்கறிஞர் அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையிட்டார். முறையீட்டை ஏற்று,  திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி பதில் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close