மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வர்களுக்கு கட்சி தலைமையகத்தில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதோர் விருப்பமனு அளித்தனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மற்றும் துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் தொடர்ந்து 5 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெறுகிறது. இன்று சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 தொகுதிகள் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.
newstm.in