வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க நடவடிக்கை: மதுரை மாவட்ட ஆட்சியர்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:32 pm
extension-of-voting-time-madurai-district-collector

மதுரையில் வாக்குபதிவு நேரத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வரும் 18, 19ம் தேதிகளில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் 18ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குபதிவும் நடைபெறவுள்ளதால், சித்தரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று  மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நடராஜன், "தேர்தல் மற்றும் திருவிழாவிற்கு தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை இன்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சித்திரை திருவிழா குறித்து முன் கூட்டியே தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்தாதது ஏன் என்ற கேள்விக்கு,  உள்ளூர் விடுமுறை குறித்து மட்டுமே  தேர்தல் ஆணையம்  கேட்டதாகவும், எனவே மதுரையில் ஏப்.19ம் தேதி உள்ளூர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், தேரோட்டம் ஏப்.18ம் தேதி பகல் 12 மணிக்கு நிறைவடைந்து விடும் என்றும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close