மார்ச் 13ல் இடைத்தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் - அதிமுக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:17 pm
admk-application-to-be-issued-on-march-13

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வருகிற மார்ச் 13ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் தரப்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் நேற்று தேர்தல்ஆணையத்தால்  அறிவிக்கப்பட்டு விட்டது. மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 -ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

இதனிடையே, இன்று சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும், நாளை வேலூர், தருமபுரி உள்ளிட்ட 19 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்க்காணல் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வருகிற 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என்றும் அன்றைய தினமே விருப்ப மனுவை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்பமனுக்கள் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.25,000/-

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டதால், அந்த தொகுதிக்கு மட்டும் விருப்பமனு அளிக்கத் தேவையில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close