பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 05:43 pm
pollachi-rapists-arrested-by-police

பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி, ஒரு கும்பல்  பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசர் என்ற நபர் முகநூல் மூலமாக ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்படவே, அந்த பெண்ணை நேரில் அழைத்துள்ளார் திருநாவுக்கரசு.

அவரை நம்பி அந்தப் பெண்ணும் நேரில் வரவே, தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், திருநாவுக்கரசு தனது நண்பர்களுடன் இணைந்து அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்துள்ளார். அந்த வீடியோக்களை வைத்து அந்த பெண்ணிடம் உள்ள நகையையும் மிரட்டி வாங்கியுள்ளனர். 

இது தொடர்பாக காவல்துறையில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, திருநாவுக்கரசு தலைமறைவானார். சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களது செல்போன்களில் இதுபோன்ற 50க்கும் மேற்பட்ட  வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. 

திருநாவுக்கரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததையொட்டி, அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை நேற்று அவரை பொள்ளாச்சி பகுதியில் கைது செய்தது. 

ஒரு இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நிலையில், அந்த பெண் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close