பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: அதிமுகவிலிருந்து 'பார்' நாகராஜ் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 06:10 pm
pollachi-rape-case-admk-dismisses-party-cadre-nagaraj

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் எனப்படும் அதிமுக பிரமுகர் நாகராஜை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து, வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்த கும்பலை, மாணவியின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் இவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது. பின்னர் இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில், புகார் கொடுத்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டியதாக நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நாகராஜை நீக்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close