காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை: ராமதாஸ் ஆவேசம்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 06:29 pm
ramadoss-tweet-about-pollachi-issue

"காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை" என்று பொள்ளாச்சி சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை மயக்கி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அந்த கும்பலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பாமக  நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர்  பக்கத்தில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!" என்று பதிவிட்டுள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close