பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது?

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:57 am
pollachi-rape-case-4-arrested-by-goondas-act

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 4 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரி, சதீஷ் குமார், வசந்த் குமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வன்னெடும் என்று மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளை சேர்ந்த யாருக்கும் இதில் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close