அவதூறு பரப்பப்படுவதாக டிஜிபியிடம் பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:06 pm
pollachi-jayaraman-files-complaint-dgp

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தன் மீது  அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களை போலீசில் புகார் அளிக்க கூறி, தானே இந்த விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். இந்த விவகாரத்தில் தன்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றும், குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தானும் தனது குடும்பத்தினரும் எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினரிடம் சென்று இதுகுறித்து பதிலளிக்க தயாராக உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close