திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? இன்று தெரிந்துவிடும்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:25 am
dmk-alliance-competing-blocks-today-announce

மக்களவைத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கிறார். 

மக்களவைத் தேர்தலில் திமுக 20 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது. வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதேபோல், மதிமுக, ஐ.ஜே.கே., ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க ஆகியவை தலா ஒரு இடங்களிலும் போட்டியிட தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. 

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளன என்பது குறித்து  திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கவுள்ளார். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close