தேர்தல் நடத்தை விதி: சுவர் விளம்பரங்கள் அழிப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:44 am
destruction-of-wall-ads

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், அவற்றில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் பெயர்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அரசியல் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டும், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அவர்களின் யர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளும், பல்வேறு அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுவர் விளம்பரங்கள், கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக மாநகராட்சியின் சார்பில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், கட்சி சுவர் விளம்பரங்களை பணியாளர்களைக் கொண்டு அழிக்கும் பணியை திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவராசு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக திருச்சி விமான நிலையம் அருகே உள்ள சுவர் விளம்பரங்கள், சுவரெட்டிகள் அகற்றும் பணி நடைபெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close