தனிச் சின்னம் கேட்டு அடம்பிடிக்கும் வி.சி.க!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:34 am
vck-decision-to-claim-the-unique-symbol

மக்களவைத் தேர்தலையொட்டி, தனிச் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மெழுகுவர்த்தி, நட்சத்திரம், மோதிரம் உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. இருப்பினும் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆணையத்தில் மனு அளித்திருந்தது. இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

அதில், தமிழக இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை நடத்தினர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுகவும் அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், தனிச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், மோதிரம் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம் எனவும், மோதிரம் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லாத பட்சத்தில் வேறு சின்னத்தை கேட்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இதற்காக விசிக நிர்வாகிகள் இன்று மாலை அல்லது நாளை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று நேரில் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close