பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:35 am
goondas-act-invoked-against-pollachi-assault-case

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் முகநூல் மூலமாக பேசி, நண்பர்களாக பழகி, பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, நேரில் வரவழைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர் சில காம கொடூரர்கள். அந்த பெண்களை பாலியல் தொந்தரவு/ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களின் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரி, சதீஷ் குமார், வசந்த் குமார் ஆகிய 4 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

newstm,in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close