பெண்கள் பாதுகாப்பாக இல்லை: பொள்ளாச்சி சம்பவம் குறித்து கனிமொழி எம்பி ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:30 am
kanimozhi-tweets-about-pollachi-case

பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே பொள்ளாச்சி சம்பவம் காட்டுகிறது என்று திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பலத்தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close