மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க இயலுமா? - மதுரைக்கிளை நீதிமன்றம் கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:45 pm
case-hearing-at-madurai-court-reg-to-postpone-madurai-election

சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க இயலுமா? என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்  காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால், தேர்தல் நடைபெறும் சமயத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி தேரோட்டம், 19ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, அதற்கு மறுநாள் திருக்கல்யாணம் என்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள்நடைபெற உள்ளன. இந்த திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டும்லாது சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர்.

இதனால், மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் நேற்று விளக்கமளித்தார். 

இந்த சூழ்நிலையில், மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், மதுரையில் தேர்தலை தள்ளி வைக்கக் இயலுமா? என நீதிபதிகள் கேட்டதற்கு, 'தேர்தல் மற்றும் திருவிழா இரண்டுமே பாதுகாப்பாக நடக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.ஏப்ரல் 18ம் தேதி தேரோட்டம் பகல் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. தேர்தல் நேரம் அதிகரிக்கப்படும். ஆனால் தேர்தலை தள்ளி வைக்க முடியாது" என்று பதில் அளிக்கப்பட்டது. 

பின்னர் நீதிபதிகள், "அப்படி என்றால் வாக்கு சதவீதம் குறைந்தால் தேர்தல் ஆணையத்திற்கு கவலையில்லையா? 100% வாக்கு என்பதை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லையா? என்று கூறி இந்த விவகாரத்த்தில் நாளை மறுநாள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close