நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் இல்லை!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:42 pm
candle-symbol-is-not-alloted-to-naam-tamilar-katchi

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், பாதி தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் ஏற்கனவே உபயோகித்த மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அக்கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேகாலயாவில் உள்ள ஒரு மாநில கட்சிக்கு ஏற்கனவே மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் வேண்டுமானால் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close