பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் கமல்ஹாசன் மனு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:52 pm
kamal-haasan-registered-complaint-in-dgp-office-reg-pollachi-case

பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மன்னிக்க முடியாத ஒரு சம்பவம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மக்கள் இருக்கும் அதே கோபத்தோடு டிஜிபியிடம் இந்த சம்பவத்தின் பதற்றம் குறித்து தெரிவித்திருக்கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்திருக்கிறார். 

மேலும்,  இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி அவர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதுதவிர, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை வெளியில் விடாமல் இருப்பது நமது கடமை" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close