நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 04:03 pm
nirmala-devi-gets-bail

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.  

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கருப்பசாமி, மற்றும் முருகன் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர், 3 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவர்கள் யாருக்காக இதனை செய்தார்கள் என்று இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும், ஆகவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், அவரிடம் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக தனி நபர்களுக்கோ, ஊடகங்களுக்கோ  பேட்டி ஏதும் வழங்ககூடாது எனவும் கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினர். 

சிறையில் இருந்து நிர்மலா தேவி சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுவிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close