பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனப் பேரணி!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 04:33 pm
makkal-needhi-maiam-s-rally-against-pollachi-assault-case

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொள்ளாச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று கண்டனப் பேரணி நடைபெற்று வருகிறது. 

இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா, செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி இந்த பேரணி நடைபெறுகிறது. பேரணியில் இறுதியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கக் கோரியும் அக்கட்சியின் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் அவர்கள் மனு அளிக்க உள்ளனர். 

முன்னதாக, இன்று பிற்பகல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியை நேரடியாக சந்தித்து பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close