பொள்ளாச்சி வழக்கை திசைதிருப்ப முயற்சித்தால் கடும் நடவடிக்கை: கோவை கலெக்டர் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 05:06 pm
pollachi-assault-case-collector-warning

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையின்றி மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பொள்ளாச்சி வழக்கை திசை திருப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், தங்களது குடும்பத்தை களங்கப்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.

இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முறையாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், சதீஷ் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

வழக்கை திசைதிருப்ப அரசியல் ரீதியாக முயற்சிகள் நடக்கிறது என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்து இருக்கின்றனர். களங்கம் விளைவிக்கும் வகையில், வரும் கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேவையின்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இன்று மாலை தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் நன்னடத்தை அமலில் இருப்பதால், அதற்குண்டான விதிமுறைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வழக்கு, இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. மேலும், பலருக்கும் தொடர்பு இருக்கலாம். இவ்விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close