பொள்ளாச்சி விவகாரம்: நடிகை நிலானி கண்ணீருடன் ஆதங்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 05:07 pm
actress-nilani-video-related-on-pollachi-issue

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கண்ணீரோடு பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்தார். இந்நிலையில், பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக தற்போது கண்ணீருடன் கூடிய வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர், தான் ஆதங்கத்தில் பேசியதற்காக எந்த பின்னனியும் இல்லாத என் மீது பொதுநல போட்டவர் தற்போது, பொள்ளாச்சியில் நடந்துள்ள கொடுமையான சம்பவத்திற்கு ஏன் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் தாய் நல்லவர்களாக இருந்தால் அவர்களே தங்கள் மகனை கொலை செய்யவேண்டும் என ஆவேசமாகவும், ஆதங்கத்துடன் பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close