பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: தமிழக அரசு முடிவு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 06:02 pm
pollachi-assault-case-transferred-to-cbi

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் முகநூல் மூலமாக பேசி அவர்களிடம் ஆசை வாரத்தை கூறி நேரில் வரவழைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர் சில காம கொடூரர்கள். அந்த பெண்களை பாலியல் தொந்தரவு/ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் தங்களது மொபைல் போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரி, சதீஷ் குமார், வசந்த் குமார் ஆகிய 4 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்ந்து இந்த வழக்கு இன்று பிற்பகல் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close