அனுமதி மறுப்பை மீறி, பொள்ளாச்சியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 06:34 pm
dmk-protest-against-pollachi-assault-case

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக திமுக சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக, அதன் தோழமை கட்சிகள், மாதர் சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று திமுக சார்பில் இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கமுடியாது என்று வருவாய் கோட்டாட்சியர் ஆர்ப்பாட்டத்திற்குஅனுமதி மறுத்துள்ளார். 

அனுமதி கொடுக்காதபட்சத்திலும் போராட்டம் நடைபெறும் என்று கனிமொழி கூறியிருந்த நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும், அதற்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்ககோரியும் திமுக சார்பில் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close