தேர்தல் பிரச்சாரம்: சென்னை வந்தார் ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:57 am
rahul-gandhi-arrives-in-chennai

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வந்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்று வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி செல்லும் ராகுல் காந்தி, அங்கு மாணவிகள் மத்தியில் பேசவுள்ளார். தொடர்ந்து 3 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்கார்ட் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close