கால்வாயில் விழுந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:22 pm
family-of-6-including-2-minors-dead-as-car-falls-into-tamil-nadu-canal

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக வழியில் கால்வாயில் விழுந்தது. 

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் கெடிமேடு என்ற இடத்தில் உள்ள பிஏபி கால்வாயில் கார் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அவர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. காரில் இருந்து 6 உடல்கள் கைப்பற்றப்பட்டன. 

நேற்று நள்ளிரவில் கார் குறுகிய பாலம் வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. கார் முழுவதும் லாக் ஆகியிருந்தால் யாராலும் தப்பிக்க முடிந்திருக்காது என்றும் போலீசார் கூறுகின்றனர்.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close