பெண்களை மதிப்பதில் தென் இந்தியா தான் பெஸ்ட்: ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:54 pm
south-india-is-to-be-treated-with-respect-to-women-rahul-gandhi

பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவைவிட தென்இந்தியா சிறந்து விளங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதைத்தொடர்ந்து மாணவிகள் மத்தியில், "சேஞ்ச் மேக்கர்ஸ்" என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். மாணவி ஒருவர் சார் என கூறியதும், "சார் என கூறவேண்டாம்... என்னை ராகுல் என்றே கூப்பிடலாம்" என கூறினார். அதைத் தொடர்ந்து  மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது நிதி ஒதுக்கீடு குறைவாகவே இருப்பதாக தெரிவித்தார். 

பெண் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், பெண்களை இரண்டாம் நிலையாக கருதாமல், சமநிலையில் கருத வேண்டும் என கூறினார்.  பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close