ராபர்ட் வதேராவிடம் மட்டும் விசாரணை ஏன்? : ராகுல் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:06 pm
the-corruption-is-the-obstacle-of-the-country-s-growth-rahul-gandhi

ராபர்ட் வதேரா போன்ற குறிப்பிட்ட நபர்களை மட்டும், மத்திய அரசு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது ஏன்? என்று ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், "யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்த அரசுக்கு உரிமை உள்ளது எனவும், ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் விசாரணை வளையத்தில் கொண்டு வருவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். 

மேலும், அனில் அம்பானி ஒருபோதும் விமானம் தயாரித்ததில்லை. அப்படியிருக்கும்போது, எச்.ஏ.எல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ஏன் அனில் அம்பானியிடம் அதனை கொடுக்க வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வரி  குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close