டிஜிபிக்கள் நியமனத்திற்கான கால வரம்பு 6 மாதமாக மாற்றம்! - உச்ச நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:26 pm
only-officers-with-minimum-six-month-tenure-left-to-be-appointed-as-dgp-sc

மாநிலத்தில் டிஜிபியை நியமனம் செய்வதற்கான கால வரம்பு மற்றும் டிஜிபி-க்கள் நியமனங்கள் தொடர்பான விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பின் வழியாக இன்று வெளியிட்டுள்ளது. 

ஒரு மாநிலத்தில் புதிதாக தேர்வு செய்யப்படும் டிஜிபிக்கள் மூத்த அதிகாரிகளாக இருக்க வேண்டும், அவர்கள் பணி நிறைவு பெற 2 வருடமாவது பணிக்காலம் இருக்க வேண்டும். அவர்களின் பெயர்களை மூன்று மாதங்களுக்கு முன் புதிய டிஜிபி பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வருகிறது. 

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய டிஜிபியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் தமிழக அரசு, 'தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் மூத்த அதிகாரிகள் யாரும் இல்லை. முக்கிய அதிகாரிகள் அனைவருமே ஒரு வருடத்தில் பணி நிறைவு பெற உள்ளனர். எனவே டிஜிபியை நியமிக்கும் கால வரம்பை மாற்றி அமைக்க வேண்டும்' என்று கூறியது. 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், "டிஜிபி பதவிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால வரம்பு இருந்தால் போதுமானது. 6 மாதம் பணிக்காலம் இருக்கும் பட்சத்திலும் பதவி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம்.அதே நேரத்தில் மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது. யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபி களை நியமிக்க வேண்டும்.

முன்னதாக உச்ச நீதிமன்றம் கூறியபடி, ஒரு மாநிலத்தில் பணியாற்றும், மூத்த ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை, மாநில அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை பரிசீலிக்கும் தேர்வாணையம், முதல் ஐந்து அதிகாரிகளில் மூவரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பும். அப்படி அனுப்பப்படும் மூவரின் பெயர்களில் இருந்து மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து டிஜிபியாக நியமிக்க வேண்டும். டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து டிஜிபியாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close