மதுரைக்கு கூடுதலாக 3,700 போலீசார் தேவை: தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் கோரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:42 pm
parliament-elections-need-police-force-extra-madurai-collector

மதுரையில் சித்திரை திருவிழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்கவிருப்பதால் பாதுகாப்பு கூடுதல் போலீஸ் தேவை என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடைபெறும் அதே சமயத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. 

இதனால், மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பான ஒரு வழக்கில், 'சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க இயலுமா?' என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், தேர்தல் பாதுகாப்பிற்காக 12 ஆயிரம் போலீசார் இருந்தாலும் தேர்தலை நடத்துவது கடினம், எனவே கூடுதலாக 3,700 போலீசார் தேவை  என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close