13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:44 pm
cmc-information

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சேலத்தில் 102, தர்மபுரியில் 101, திருத்தணியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழ்கத்தில் நிலவும் வெப்பநிலை தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலாக வறண்ட வானிலையே நிலவும். 

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் 2ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close