பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: நீதிபதி கிருபாகரன்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 03:16 pm
journalists-safety-is-important-madurai-court

பத்திரிகையாளர்களின் சமூகப் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகந்நாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "செய்தியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. பலருக்கு குறைந்த ஊதியம் தான் கிடக்கிறது. அதே நேரத்தில் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் அவர்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை துணிச்சலாக வெளியே கொண்டுவரும் போது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே பத்திரிக்கையாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கென நல வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் " என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள்,  பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பத்திரிகையாளர்களின் சமூக பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறி நலவாரியத்தை அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close