ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்: தேர்தல் அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:51 pm
if-you-take-over-rs-10-lakh-the-income-tax-department-will-be-informed

 

 

 

தனிநபர் ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றால் அதுபற்றி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் சித்திரை திருவிழாவையொட்டி சட்டம், ஒழுங்கு குறித்து தாக்கல் செய்யும்  விரிவான அறிக்கை, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு நீதிமன்ற முடிவின் படி தேர்தல் தேதி மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரசாரத்தை பள்ளி, கல்லூரிகளில் உரிய அனுமதி பெற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் இதுவரை  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக உதகையில் உள்ள கொள்ளிமேடு பகுதியில் ரூ.73.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தனிநபர் ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றால் அதுபற்றி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்  என குறிப்பிட்ட அவர், தனி நபர் ஒருவர் உரிய ஆவணங்களுடன் ரூ.1 லட்சம் வரை எடுத்து செல்லலாம் எனவும், ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம் எனவும் கூறினார். 

அதேநேரத்தில் அரசியல் கட்சியை சார்ந்த யாராயினும் 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்து சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும், சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனை நடந்தால் அதை கண்காணிக்க வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close