நாட்டில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதுதான் முதல் வேலை: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:18 pm
rahul-gandhi-press-meet

ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த ராகுல், "காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உடன்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. உண்மையில் பா.ஜ.கவுக்கு தான் கூட்டணி இல்லை. எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

ஒருநாட்டின் பொருளாதார நிலைதான் நாட்டின் மற்ற விஷயங்களை நிர்ணயிக்கும்.  இதனை ஆளுங்கட்சியினரும், பிரதமரும் புரிந்துக்கொள்ளவில்லை. எனவே எங்கள் முதல் வேலை நாட்டில் நல்லிணக்கம் கொண்டு வருவது தான். தமிழ் மக்களையும் சேர்த்து நாட்டில் உள்ள அனைவரும் தாங்கள் இந்த நாட்டின் ஒரு பங்கு என்பதை உணர வேண்டும். 

எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவோ, தாக்கப்படுவதாகவோ, தங்கள் கலாச்சாரமும் மொழியும் அழிக்கப்படுவதாகவோ நினைக்கும் அளவுக்கு அரசு நடந்துக்கொள்ள கூடாது. இந்தியா அனைவருக்குமானது. 

ஜிஎஸ்டியில் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. எனவே அதில் சில மாற்றங்கள் கொண்டு வருவோம். சிறுத்தொழில்களை மேம்படுத்துவது மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவோம். பிரதமர் மோடி நாட்டில் உள்ள சிறுத்தொழிலாளர்களை பணமதிப்பிழைப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலமாக தாக்கி உள்ளார். அவர்கள் வாழ்க்கையை மாற்ற நாங்கள் பல திட்டங்களை வைத்துள்ளோம். எங்கள் வாக்குறுதிகளில் அவற்றை இணைத்துள்ளோம். ஓரிரு வாரத்தில் அவற்றை வெளியடுவோம். 

புல்வாமாவில் 45 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் எடுத்துக்கொள்கிறது. எனது கேள்வியே, அந்த வீரர்களை பாதுகாக்க அரசு என்ன செய்கிறது. பாகிஸ்தான் குண்டு வீசாமல் இருக்க அரசு என்ன செய்தது. 

புல்வாமா தாக்குதலின் முக்கிய குற்றவாளியான மசூத் அசாத் பா.ஜ.கவால் தான் விடுதலை செய்யப்பட்டார். அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது பா.ஜ.க தான். தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இதில் தொடர்புள்ளது. எனவே அந்த குற்றவாளியை திருப்பி அனுப்பியதற்கு காரணம் என்ன என்று பா.ஜ.க தான் விளக்க வேண்டும்." என்றார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close