10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:42 pm
tn-sslc-public-exam-starts-tomorrow

தமிழகத்தில் நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. மொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 3,371 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

2018-19 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள்(மார்ச் 14) நாளை தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 3,371 மையங்களில் மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பேர் தேர்வு எழுத உள்ளனர். சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 5500க்கும் மேற்பட்டோர் கொண்ட பறக்கும் படை தேர்வு மையங்களுக்கு படையெடுக்கின்றனர். இதில், 38,176 பேர் தனித்தேர்வர்கள் ஆவர். 

மேலும், இந்தாண்டு மொழிப்பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளன. இதர பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.45 மணி வரை நடைபெற உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close