பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்காகவே  ஆட்சி நடத்துகிறார்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 05:49 pm
rahul-gandhi-speech-at-tn

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் பொய்யை தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்; அவர் தனது பணக்கார நண்பர்களுக்காகவே  ஆட்சி நடத்துகிறார் என ராகுல் காந்தி பேசியுள்ளார். 

இன்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர், "தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு முன்னதாக அவர் மிகப்பிரமாதமாக பேசினார். முன்னதாக, நான் கலைஞரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் அதிக நேரம் பேச வேண்டும் என்ற விருப்பம் என்னிடம் இருந்தது. தலைவர் கலைஞர் மறைந்தாலும் நம்மோடு இருக்கிறார் என்பதை நம்புகிறேன், அவர் மறைந்துவிடவில்லை, அவர் நம்முடன் வாழ்கிறார், நம்மை வழிநடத்துகிறார். தமிழக மொழியின் வளர்ச்சியில் இருக்கிறார். அதேபோன்று தலைவர் காமராஜரும்  மக்களோடு கலந்திருக்கிறார்

ஆனால், அவர்களுக்கெல்லாம் குறையாத தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். இது மக்கள் உணர்வுகளை ஏற்றுக்கொண்டுள்ள கூட்டணி. தமிழ் கலாச்சாரம், தமிழ் வளர்ச்சிக்கும் எதிரான செயல்கள் இங்கு நடைபெறுகின்றன. கூட்டணியின் குரல் தமிழக மக்களின் உரிமைக்குரலாக எதிரொலிக்கும். 

தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மோடியின் ஆட்சியாக தான் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் பொய்யை தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். வங்கிக்கணக்கில் 15 கோடி ரூபாய், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளை பாதுகாப்போம் என்றெல்லாம் கூறினார். ஆனால், டெல்லி ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தை பார்த்து கலங்கினேன். ஆனால் நாங்கள் கூறியது போல் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வோம், ஏற்கனவே 3 மாநிலங்களில்  விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் செய்திருக்கிறோம். 

பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்காகவே ஆட்சி நடத்துகிறார். 526 கோடிக்கு வாங்க இருந்த ரபேல் விமானங்கள் 6600 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் உள்ளது.  திருவள்ளுவர் கூறியது போல், உண்மை வெல்லும் என்று கூறியது போல் ஒருநாள் உண்மை வெல்லும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close