காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு என்ன செய்வோம்? - சொல்கிறார் ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 06:12 pm
rahul-gandhi-speech-at-nagarcoil

இன்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஜிஸ்டி புதிய எளிய வடிவில் மாற்றப்படும். மோடியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியினால் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டது. எனவே காங்கிரஸ், "One Tax; Simple Tax; Minimum tax" என்ற எளிய வடிவில் கொண்டு வருவோம். 

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வங்கிக்கடன் அளிப்பது போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படும். ஏழைமக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். 

கஜா புயலில் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதி அளிக்காமல் தேவையில்லாமல் பணத்தை வாரி இறைக்கிறது. மீனவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கென பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். மீனவர்களுக்கென தனி அமைச்சகம் கொண்டு வரப்படும். 

பெண்கள் மற்றும் சகோதரிகளே, இந்த நாட்டை காப்பது நீங்கள் தான்; 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பெண்கள் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். மேலும் 33% இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வருவோம். மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பும் பெண்களுக்கு 33% ஒதுக்கப்படும்.

ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் செயல்படுத்துவது சரியல்ல. எனவே ஒரு கொள்கையை வைத்து செயல்படும் பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் வரவிடக்கூடாது. 

அவர் தமிழ் மொழியை அழிக்க நினைப்பது போல் மற்ற மாநில மொழிகளையும் அழிக்க நினைக்கிறார். எனவே அவரது ஆட்சியை புறக்கணிப்போம்" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close