பிரதமர் மோடி மக்களின் வங்கிக்கணக்கில் 15 ரூபாயாவது போட்டாரா? -ஸ்டாலின் கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 07:36 pm
mk-stalin-speech-at-nagarcoil

வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை ஒரு 15 ரூபாயாவது போட்டாரா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளதையடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி திமுக- காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுலை வரவேற்று பேசினார். 

அப்போது அவர், "இந்தியாவின் இளம் பிரதமராக வரவிருக்கும் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்துள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். அவரை பிரதமர் வேட்பாளராக நான் ஏற்கனவே முன்மொழிந்துவிட்டேன். அவர் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. 

நரேந்திர மோடி அவர்கள் விதவிதமாக உடை அணிந்துகொண்டு, தலையில் விதவிதமாக தொப்பி அணிந்துகொண்டு சுற்றுகிறார். அவர் தான் ஒளிமயமாக ஆகிக்கொண்டிருக்கிறாரே தவிர, நாடு ஒளிமயமாக ஆகவில்லை.  வளர்ச்சி வளர்ச்சி என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், இன்றைய நிலைமை, 'தளர்ச்சி தளவங்கிக்கணக்கில்ர்ச்சி' என்று தான் சென்று கொண்டிருக்கிறது. 

பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% குறைந்துள்ளது. மோடி வந்தால் திட்டம் வரும், நிறுவனங்கள் திறக்கப்படும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் இருந்தனர், ஆனால் எதுவும் நடக்கவில்லை. 

15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் போடுவதாக கூறினார், சரி 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரம் கூட வேண்டாம், ஒரு 15 ரூபாயாவது டெபாசிட் ஆனதா? இல்லை. அவர் தலைமையில் ஒரு துக்ளக் தர்பாரை நடத்திக்கொண்டிருக்கிறார்" என்று பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close