பொள்ளச்சி சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 07:18 pm
one-more-arrest-connection-with-pollachi-case

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில், மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சியில், இளைஞர்கள் சிலர், பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவியர் மற்றும் கோவை, பொள்ளாச்சியில் தங்கி பணியாற்றும் பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி, காதலிப்பதாக கூறி நம்பவைத்து, அவர்களை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்தனர். 

அந்த பெண்களின் ஆடைகளை கழற்ற வைத்து, அவர்களை அடித்து துன்புறுத்தி, அந்த வீடியோவை காட்டி மிரட்டி, அடிக்கடி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது போல், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, அவர்களை மிரட்டிய வழக்கில், போலீசார், நான்கு பேரை கைது செய்திருந்தனர். இதில், அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து சிபிசிஐடி போலீசார்  விசாரிக்கின்றனர். 

இந்நிலையில், தன்னை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொள்ளாச்சியை சேர்ந்த, பாலா என்பவர் மீது, அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது குறித்து, ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார், பாலாவை கைது செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close