ஏப்.12ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:23 am
school-exam-should-be-completed-on-or-before-april-12

தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளைஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-19 கல்வியாண்டில் பள்ளி செயல்படும் கடைசி நாள் ஏப்ரல் 12 என்றும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close