விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் ராமதாஸ்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:42 am
dmdk-vijayakanth-ramadoss-meet

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சந்திக்கும் பொருட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இறுதியான நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக கூட்டணி நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் இருந்து, பின்னர் இறுதியாகவே கூட்டணி உறுதி செய்யப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சித் தலைவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக்கொண்டதும் அபூர்வம் தான். 

அந்தவகையில், தற்போது அதிமுக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், மனக்கசப்புகளை கடந்து, இரு கட்சியின் தலைவர்களும் இன்று சந்தித்துள்ளனர். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவருடன் அன்புமணி ராம்தாஸ்-ம் உடன் சென்றுள்ளார். 

பாமக மற்றும் தேமுதிக இடையே தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close