தேர்தல் புகார் குறித்து தகவல் தெரிவிக்க இலவச எண்: தேர்தல் அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 01:09 pm
free-number-to-inform-the-election-complaint

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி, "தமிழகத்தில் ரயில்வே, விமான நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பணப்பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையினர் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுரை தமிழகத்தில் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரை 1800-4256-669 என்ற இலவச எண்ணிலும், 9445467707 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரியப்படுத்தலாம் என கூறியுள்ளார். 

newstm.in
  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close