திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்று அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி உறுதி!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 01:09 pm
dmk-congress-alliance

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு, மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. 

எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close