இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டி! இன்று முதல் விருப்பமனு விநியோகம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 02:00 pm
mnm-is-going-to-contest-in-by-election

தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் 18 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் (ஏப்ரல் 18) வருவதையடுத்து, இரண்டு தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். இதையடுத்து, தற்போது தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்றும் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகங்களில் விருப்பமனு விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close