பொள்ளாச்சி பாலியல் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 03:36 pm
pollachi-assault-case-transferred-to-cbi-tn-released-go

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close