திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 03:40 pm
election-can-t-be-postponed-for-thiruvizha-in-madurai

மதுரையில் சித்திரை திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்  காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால், தேர்தல் நடைபெறும் சமயத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. எனவே, மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு இரு தினங்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதற்காக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், வாக்குப்பதிவு நேரத்தை வேண்டுமானால் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கிறோம் என்றும் பாதுகாப்பிற்காக அண்டை மாநிலத்தில் இருந்து கூட போலீசார்களை வரவழைத்து தேர்தலை நடத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் நீதிபதிகள் பேசும்போது, "மதுரை தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச்சாவடிகள் உள்ளன. அப்படி இருக்கையில் அந்த 51 வாக்குச்சாவடிகளில் மக்கள் எப்படி வாக்களிப்பர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் திருவிழாவுக்காக ஊருக்குச் செல்வர். தேர்தல் ஆணையத்தின் பதிலில் திருப்தியில்லை. முறையாக பதிலளிக்க தவறினால் தலைமை தேர்தல் அதிகாரி ஆஜராக நேரிடும். நாளை பதிலை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close