வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 04:11 pm
case-filed-against-velmurugan-thirumurugan-gandhi

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சேப்பாக்கம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close