ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது அவதூறு வழக்கு பதிவு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 09:14 pm
pollachi-jeyaraman-files-case-against-stalin-s-son-in-law-sabareesan

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தன் மீது அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் முக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கிய புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தன் மீது இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பப்படுவதாக சில தினங்களுக்கு முன் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீதும், அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, சபரீசனின் வழக்கறிஞர், பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சபரீசன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close