பொள்ளாச்சி விவகாரத்தில் மெத்தனம் - தமிழக அரசை சாடிய கமல்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:05 pm
kamal-hassan-questions-tamilnadu-government-on-pollachi-issue

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை ஒரு ஆடியோ பதிவில் கேட்டதாகவும், அதை கேட்டு தனது நெஞ்சம் பதறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நிர்பயா விவகாரம் நாட்டையே உலுக்கிய போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாலியல் குற்றங்களை கொடூர குற்றங்களாக கருத வேண்டுமென கூறியதை குறிப்பிட்டு, "அவர் பெயரில் ஆட்சி செய்பவர்களால் எப்படி இவ்வாறு மெத்தனமாக இருக்க முடிகிறது" என்றும் கேள்வி எழுப்பினார். கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவை கீழே பாருங்கள்...

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close