பொள்ளாச்சி விவகார வீடியோக்களை வெளியிடக் கூடாது : சிபிசிஐடி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:38 am
pollachi-issue-do-not-upload-videos-in-social-media-warned-cbcid

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடக் கூடாது எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருவதாகவும், இது தொடர்பான தகவல்களை கோவை அவினாசி ரோட்டில் செயல்பட்டுவரும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ புகைப்படங்களோ வீடியோவோ வைத்திருப்பவர்கள், நேரில் சென்று அளிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விவரம் ரகசியமாக காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் அளிக்க வேண்டும் என்றாலும் 94884 42993 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close